சென்னை: பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் செல்லும் 200 அடி ரேடியல்
சாலையில் மரம் நடுவிழா இன்று காலை 7 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது.
இதனை இந்த பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் மற்றும் மாநில
நெடுஞ்சாலை துறையுடன் சேர்ந்து மரக்கன்று நட்டனர்.
இந்த மரம் நடு விழாவிற்கு குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள்
என அனைவரும் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் நடப்பட்ட அனைத்து மரக்கன்றுகளும் நாட்டு வகை மரக்கன்றுகளாக
நெடுஞ்சாலை துறையினரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதுபோல் மரக்கன்று நடவு வரும் காலங்களில் தொடர்ந்து நடைபெறும் என்று இங்கு குடியிருக்கும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
-செந்தில் முருகன், சென்னை தெற்கு.