கோவை சவுரிபாளையம் பகுதியில் அமைந்துள்ளது லட்சுமி நரசிம்ம போஜனாலயம். இந்த கடை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. இங்கு அமர்ந்து உணவு உட்கொள்ளும் பகுதி குளுமையாக இருக்க வேண்டுமென்பதால், மேற்கூரை தென்னை கீற்றால் வேயப்பட்டுள்ளது.
இக்கடையின் அமைப்பும், தரத்துடன் கூடிய ருசியான உணவுகளும் இந்த கடையை கோவை மாநகரில் பிரபலப்படுத்தியுள்ளது. கூரைக்கு கீழ் அமர்ந்து சாப்பிடுவதால் பலரும் இந்த கடையை “கூரைக்கடை” என்றே அழைக்க தொடங்கியுள்ளனர்.
70 ரூபாய்க்கு முழு சாப்பாட்டுடன், சாம்பார், புளிக்குழம்பு, ரசம், பொரியல், மோர் மற்றும் அப்பளம் வழங்கப்படுகிறது. மதியம் 12 மணி முதல் 3 மணி வரை மட்டுமே இந்த கடை செயல்படும். அதாவது மதிய உணவு மட்டுமே இங்கு பரிமாறப்படுகிறது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த உணவகத்தில் தினந்தோறும் விதவிதமான உணவு வகைகள் பரிமாறப்படுகிறது. வாரத்தில் இரண்டு நாட்கள் மீன் வகைகள், இரண்டு நாட்கள் சிக்கன் வகைகள், இரண்டு நாட்கள் மட்டன் வகைகள் வழங்கப்படுகிறது.
சில ஓட்டல்களில் முதல் நாள் பரிமாறப்பட்ட உணவு வகை மறுநாள் ஃபிரிட்ஜ்-ல் வைத்து எடுக்கப்பட்டு சூடேற்றிக்கொடுக்கப்படும் நிகழ்வுகள் நடக்கின்றன. அது போல இந்த ஓட்டலில் நடப்பதில்லை. முதல் நாள் மீன் உணவு என்றால் மறு நாள் முழுக்கவே சிக்கன் வகை மட்டும் தான் கிடைக்கும். இதனை வாடிக்கையாளர்கள் வெளிப்படையாகவே புரிந்து கொள்ள முடிகிறது. இதனால் இந்த ஓட்டல் மீதான நம்பகத்தன்மை வாடிக்கையாளார்களிடையே அதிகரித்திருக்கிறது.
அதன்படி, திங்கள் மற்றும் சனி கிழமைகளில், மீன் வகைகளும், செவ்வாய் மற்றும் வியாழன் சிக்கன் வகைகளும், புதன் மற்றும் வெள்ளி, மட்டன் வகைகளும் கிடைக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை கடைக்கு விடுமுறை விடப்படுகிறது.
வெளியிலிருந்து மசாலா பொருட்கள் வாங்குவதில்லை. பொருட்களை வாங்கி இந்த உணவகத்திலேயே மசாலா தயாரிப்பதால் சுவை தனித்து நிற்கிறது. இதனால் சவுரிபாளையம் மட்டுமல்லாது கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், விடுதிகளில் தங்கி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும் வந்து உணவு உட்கொள்கின்றனர். இது தவிர சாம்பார், மீன் குழம்பு, சிக்கன் வறுவல், மோர், பொரியல் உள்ளிட்ட பொருட்களும் தனித்தனியாக விற்பனை செய்யப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் மதியம் உணவு சாப்பிட்டால், இரவு எந்தவித பக்க விளைவுகளும் இருக்கக்கூடாது அதுவே சிறந்து உணவாக கருத முடியும். அந்த வகையில் தன்னுடைய வாடிக்கையாளர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதால் தன் கடைக்கு வாடிக்கையாளார்கள் திரும்ப திரும்ப வருகின்றனர். இது தனக்கு மன திருப்தியை அளிப்பதாக தெரிவிக்கிறார் இக்கடையின் உரிமையாளர் இந்த கடையில் இன்று என்ன உணவு என்று தெரிந்துகொள்ள 9080360331 என்ற எண்ணை அழைக்கலாம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.