கோவையில் உள்ள வெண்ணிலா கலை இலக்கிய மன்றத்தின் சார்பில் பாரதியார் நினைவு நாளை முன்னிட்டு தமிழகத்தின் இளம் படைப்பாளிகளுக்கான தேடலில் இப்படிக்கு பாரதி என்ற தலைப்பில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் சிறந்த படைப்பாளியாக இளம் கவிஞர் க. ரவிச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டு விருதும் பாராட்டு பட்டயமும் வழங்கப்பட்டது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்ச்சிக்கு வெண்ணிலா மன்ற செயலாளர் கவியக மணிவண்ணன் தலைமை தாங்கினார்.
கவிஞரும் பட்டிமன்ற பேச்சாளருமான கவிதா வேணுகோபால் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் இளம் படைப்பாளி க.ரவிச்சந்திரனுக்கு இலக்கியத்தாமரை என்ற விருதை பட்டாம்பூச்சி குழும ஒருங்கிணைப்பாளர் கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதில் கவிஞர் வழக்கறிஞர் வேணுகோபால், திருப்பூர் டாப் லைட் நூலக ஒருங்கிணைப்பாளர் மணிநாதன். டுவின் ஸ்டார் இம்பெக்ஸ் நிர்வாக இயக்குனர் பி.ராஜேந்திரன் கவிஞர் கவிதாஞ்சலி பேச்சாளர் ஆயிஷா, கவிஞர் அருண்குமார், (கவிதைச் சிறுவன்) உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் ஏராளமான இலக்கிய ஆர்வலர்கள் கவிஞர்கள் திரளாக கலந்துகொண்டனர். முடிவில் கவிஞர் மதிவதனி செல்வராஜ் நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.
3 Responses
எல்லோரையும் ஊக்குவிப்பு செய்து ,அவர்களுக்கு விருது வழங்கி பாராட்டுவதை மனததார பாராட்டி மகிழ்கிறேன்.
இதய மகிழ்வும் இனிய நன்றியும்
அருமையான முன்னெடுப்பு.. தொடர்க தமிழுக்காய்.