தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு திருட்டு வழக்கிகளில் தொடர்புடையவரை போலீசார் கைது செய்தனர். ரூ. 48லட்சத்து 42ஆயிரம் மதிப்புள்ள நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் திருட்டு வழக்குள் மற்றும் பாலியல் சம்பவம் அதிகரிப்பு காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுத்தல் மட்டுமே இனி இது போன்ற நிகழ்வுகள் நடக்காது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவுப்படி, சாத்தான்குளம் காவல் உட்கோட்டத்தில் நடைபெற்ற பல்வேறு திருட்டு, மற்றும் கொள்ளை வழக்குகளை கண்டுபிடிக்கும் பொருட்டு, சாத்தான்குளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அருள் மேற்பார்வையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் தனிப்படை அமைத்து எதிரிகளை தேடி வந்த நிலையில், இன்று அதிகாலை 3:30 மணிக்கு பன்னம்பாறை ஜங்ஷனில் தனிப்படையினர் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்போது ஸ்கூட்டரில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டதில் அவரது பைக்கில் ஸ்குரூ டிரைவர், கட்டிங் பிளேயர் மற்றும் இரண்டு பிளாஸ்டிக் கவர்களில் நகைகள் இருப்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் கட்டாரிமங்கலத்தை சேர்ந்த, கொடிமலர் (40) என்பதும் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் என்பதும் தெரியவந்தது.
அவர் மீது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 9 திருட்டு வழக்குகளிலும், நாசரேத் காவல் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகளிலும், தட்டார்மடம் காவல் நிலையத்தில் 4 திருட்டு வழக்குகளிலும், மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் 1 திருட்டு வழக்கிலும், திருச்செந்தூர் காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகளிலும் சம்மந்தபட்டவர் என்பது தெரியவந்தது.
இவ்வளவு வழக்குகள் இவர் மேல் இருந்தும் மக்களுக்கு இவர் திருடர் என்று தெரியவில்லை.
இதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து சுமார் 126 பவுன் எடையுள்ள தங்க நகைகள், யமகா ரே ஸ்கூட்டர், கலர் டி. வி ஆக மொத்தம் ரூ. 48லட்சத்து 42ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றபட்டது.
இந்த சொத்துக்கள் அனைத்தும் நீதிமன்றம் மூலம் உரிய உரிமையாளர்கள் வசம் ஒப்படைக்கப்படும் என எஸ்பி பாலாஜி சரவணன் தெரிவித்தார். மேலும், சிறப்பாக பணியாற்றிய சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன், சிறப்பு உதவி ஆய்வாளர் டேவிட் கிறிஸ்துராஜ், முதல் நிலைக் காவலர் சுதன், காவலர்கள் அகஸ்டின் உதயகுமார், அருண்குமார் ஆகியோர்களை காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார். காவல்துறையின் செயல் மகிழ்ச்சி ஆனால் திடர்களுக்கு இன்னும் பயம் வரவேண்டும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம் .