கோவை மாவட்டம் பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரியில் மகாகவி பாரதியாரின் 100 ஆவது நினைவு ஆண்டை முன்னிட்டு மகாகவி பாரதியாரின் திருவுருவச் சிலை திறப்பு விழாவானது 13.09.2022 அன்று நடைபெற்றது. கல்லூரித் தலைவர் டாக்டர் பி.கே கிருஷ்ணராஜ் வாணவராயர் அவர்கள் தலைமை தாங்கினார்.
கல்லூரி செயலாளர் திரு எம். பாலசுப்பிரமணியம் அவர்கள் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கலந்து கொண்டார். கல்லூரி முதல்வர் முனைவர் ரெ. முத்துக்குமரன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். குமரகுரு கல்வி நிறுவனங்களின் இணைத் தாளாளர் திரு. சங்கர் வாணவராயர், திருமதி கருணாம்பிகை வாணவராயர், கல்லூரி பொருளாளர் திரு. சிவக்குமார் ஆகியோர் இச்சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பாரதியாரின் திருவுருவச் சிலையை மாணவ மாணவிகள் திறந்து வைத்தனர். மகாகவி பாரதியாரின் சிலை திறப்பு விழாவையொட்டி என்.ஜி.எம் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறை பேராசிரியரும் தமிழ் இலக்கியத்துறை மதிப்பியல் பேராசிரியருமான முனைவர் அமுதன் அவர்களுக்கு கல்லூரியின் சார்பாக மகாகவி பாரதி விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. தமிழ் இலக்கியத் துறைத் தலைவர் முனைவர் த.ராஜ்குமார் வாழ்த்து மடல் வாசித்தார். மகாகவி பாரதி விருது பெற்ற முனைவர் அமுதன் அவர்கள் ஏற்புரை வழங்கினார்.
கல்லூரித்தலைவர் டாக்டர் பி.கே கிருஷ்ணராஜ் வாணவராயர் அவர்கள் தலைமை உரை வழங்கினார். அவர் தம் தலைமையுரையில் “சுதந்திரத்திருநாள் அமுதப்பெரு விழா, அருட்செல்வரின் நூற்றாண்டு விழா, மகாகவி பாரதியாரின் 100 ஆவது நினைவு ஆண்டு விழா ஆகியவற்றைக் கொண்டாடும் இந்நேரத்தில் என்.ஜி.எம் கல்லூரியில் மகாகவி பாரதியாருக்கு சிலை திறப்பது என்பது மகிழ்ச்சிகரமானது என்றும் “ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா” என்ற பாரதியின் பாடலில் வரும் கண் என்பது மாணவர்களையே குறிக்கும் என்றும் பாரதி காந்தியின் சந்திப்பை எடுத்துக் கூறி, காந்தி பாரதியின் மேல் கொண்டிருந்த மதிப்பையும் கூறினார்.
சுதந்திர அமுதப்பெருவிழாவை கொண்டாடும் இந்த நேரத்தில் மாணவர்கள் தங்கள் நலனைப்
பேணுவதோடு தேசத்தின் நலனையும் உணர்ந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும். பாரதியார் பெண்கள் கல்வி கற்று பாரினை உயர்த்திட வேண்டும் என்றார் அவ்வகையில் இன்று ஆண்டு தோறும் 1500 க்கும் மேற்பட்ட மாணவிகள் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படித்து பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்று வாழ்வதற்கு காரணமாக அருட்செல்வர் தோற்றுவித்த என்.ஜி.எம் கல்லூரி திகழ்கிறது என்றால் அது மிகையாகாது.
என்.ஜி.எம் கல்லலூரியில் உள்ள மனையியல் மகத்துவம், உழவு பாரதம் போன்ற சான்றிதழ் படிப்புகள் மாணவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வழிவகுக்கிறது. வாழ்க்கைக்கு தேவையான கல்வியை தருவது தமிழ் மொழியாகும். தமிழ் படிக்கின்ற மாணவர்களுக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருக்கின்றது என்றும் என்.ஜி.எம் கல்லூரி இந்தியாவின் சிறந்த கல்லூரிகளின் பட்டியலில் 125 ஆவது இடத்தில் இருக்கின்றது” என்றும் கூறினார்.
சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் எழுச்சியுரை வழங்கினார். அவர் தம் உரையில் “புரட்சி என்ற சொல்லை உருவாக்கியவர் பாரதி. சமத்துவம், சமநீதி, ஜாதி ஒழிப்பு, அறிவியல் கலந்த ஆன்மீகம் ஆகியவற்றைத் தன் கவிதைகளால் கூறியவர் பாரதி விவேகானந்தருக்கும் பாரதிக்கும் இருந்த உறவினைப் பற்றி விளக்கியுரைத்தார். மேலும் பாரதியின் எழுச்சி மிகு கவிதைகளையும் எடுத்துரைத்தார்”.
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பே. மகேஸ்வரி நன்றியுரை வழங்கினார். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள், புலமுதன்மையர்கள் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 1500க்கும் மேற்பட்டோர் இச்சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
இச்சிலை திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் முனைவர் ரெ.முத்துக்குமரன், நிர்வாக மேலாளர் இரகுநாதன், துறைத்தலைவர்கள் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.