கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க பொதுக்குழு ஆலோசனை கூட்டம். பல்லடம் அருகே காரணம்பேட்டையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் சங்க தலைவர் பழனிசாமி பேசியதாவது:
“தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வால் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்க, விசைத்தறிக்கு அரசு அறிவித்த மின் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்றும், அமைச்சர்கள், ஒழுங்குமுறை ஆணைய தலைவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்த பின்பும் மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது அமல்படுத்தப்பட்டால் விசைத்தறி தொழில் காணாமல் போகும்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
விசைத்தறிக்கான மின் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
-அருண்குமார், கிணத்துக்கடவு.