கேரளா மாநிலம் மறையூரில் புதன் கிழமை இரவு மேலாடி பகுதியை சார்ந்த பாண்டியராஜ் குடும்பத்துடன் மறையூருக்கு சினிமா காண சென்றுள்ளார். சினிமா தியேட்டரில் நிறுத்தி வைக்கப்பட்ட ஆட்டோ காணாமல் போனது.
தியேட்டரின் வெளியே வந்து பார்த்த போது ஆட்டோ காணாமல் போனது தெரியவந்தது.அதிர்ச்சியடைந்த பாண்டியராஜ் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.ஆட்டோ காணமால் போனதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அந்த பகுதி காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
பாபு நகர் பகுதியை சேர்ந்த சின்னா என்ற ராஜேஷ் என்பவர் மீது சத்தேகம் வந்தது.வீட்டிற்கு சென்று பார்த்த போது ஆட்டோவை ஒழித்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.சின்மா என்ற ராஜேஷை கைது செய்ய முயற்சி செய்த போது ஏ.எஸ்.ஐ போபியம் தோமஸ் மற்றும் சி.பி.ஒ சந்தோஷ் என்ற காவலர்களை தாக்கி விட்டு தப்பிக்க முயற்சி செய்துள்ளார்,
ஆனால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.தாக்கப்பட்ட காவலர்கள் இரண்டுபேரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சின்னா ராஜேஷ் என்பவர் பல வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி என தெரிய வந்துள்ளது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன் மூணார்.