ரயில் நிலைய சந்திப்பில் தூய்மைப் பணிகள் மேற்கொண்ட பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரி,நேதாஜி இளைஞர் பேரவை..!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலகு-1
மாணவர்களும், நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் பேரவையும், இணைந்து

கல்லூரி முதல்வர் முனைவர்.ரெ.முத்துக்குமரன் அவர்களின் வழிகாட்டுதலின்படி தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பொள்ளாச்சி ரயில் நிலைய சந்திப்பில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதில் சுமார் 40 நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவியர்கள் 50 கிலோ நெகிழிக் கழிவுகளையும், இதரக்கழிவுகளையும் அகற்றினர்.

தூய்மைப் பணிகளைத் தொடர்ந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பேரவைத்தலைவர் வெள்ளை நடராஜ் நெகிழிக்கழிவுகளினால் ஏற்படும் ஆபத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிலைய அதிகாரி அச்சித்தாபிஸ்வான் அவர்கள் தூய்மையின் பயன்களை எடுத்துரைத்தார்.

என்.ஜி.எம் கல்லூரி நாட்டுநலப் பணித்திட்ட அலகு 1 ஒருங்கிணைப்பாளர் முனைவர் ரெ.சோமசுந்தரம் அவர்கள் நிகழ்வினை ஒருங்கிணைத்தார். இந்நிகழ்வானது மக்களுக்கு தூய்மையின் விழிப்புணர்வை எடுத்துரைப்பதாக அமைந்தது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V.ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Leave a Comment

One Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp