கோவை மேம்பாலத்தில் அடுத்தடுத்து 3 உயிர்களை காவு வாங்கிய மேம்பாலம் குறித்த பீதி, ஒருமுடிவுக்கு வந்துள்ளது. இது தொடர்பான அறிக்கை ஒன்றையும் அதிகாரிகள் தாக்கல் செய்துள்ளனர்.
கோயம்புத்தூரில் ரூ.230 கோடி செலவில் ராமநாதபுரம் மற்றும் சுங்கம் முக்கியச் சந்திப்புகளில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ரூ.60 கோடி செலவில் கவுண்டம்பாளையம் சந்திப்பிலும் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.. இதில், ராமநாதபுரம் மற்றும் சுங்கம் சந்திப்பில் ரூ.230 கோடி செலவில் 3.15 கி.மீ. நீளத்திற்கு 4 வழித்தட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்தப் பாலத்தால் ராமநாதபுரம், ஓலம்பஸ் மற்றும் சுங்கம் ஆகிய 3 முக்கிய சந்திப்புகள் மற்றும் அல்வேனியா பள்ளி சந்திப்பு, சவுரிபாளையம் சந்திப்பு, புளியகுளம் பிரிவு சாலை சந்திப்பு, வானொலி நிலையம் சந்திப்பு, பந்தய சாலை சந்திப்பு, வாலாங்குளம் சாலை சந்திப்பு ஆகிய 6 இதர சந்திப்புகளிடையே உள்ள போக்குவரத்து நெரிசல் குறையும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன், சிக்னல் மற்றும் சந்திப்புகளில் வாகனங்கள் நின்று செல்வதால் ஏற்படும் காலதாமதமும் தவிர்க்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
ஆனால், இந்த மேம்பாலம் திறந்ததில் இருந்து நிறைய விபத்துகள் ஏற்பட துவங்கின. அதிலும் முதல்வர் இந்த பாலத்தை திறந்துவைத்து, ஒரேநாளில் இளைஞர் ஒருவர் பாலத்தின் சுங்கம் திருப்பு முனையில் தடுப்புச்சுவரில் மோதி உயிரிழந்துவிட்டார். இதற்கடுத்த தினங்களில் பைக்கில் சென்று கொண்டிருந்த இளைஞர், கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து இறந்துவிட்டார்.
இதனால், மேம்பாலத்தின் மீது வேகத்தடை அமைக்கும் பணி துரிதமாக நடந்தது. மேம்பாலத்தில் 8 இடங்களில் வேகத்தடை அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. மேம்பாலத்தின் 2 பக்கம், சுங்கம் வளைவு திரும்பும் இடம் உள்ளிட்ட பகுதிகளில் வேகத்தடை அமைக்கப்பட்டுவருகிறது. பாதுகாப்பு காரணமாக வேகத்தடை அமைக்கப்பட்டிருக்கிறது என்றும், அங்கு சுமார் 40 கிமீ வேகத்தில் மட்டுமே வர வேண்டும் என்றும் போலீஸார் அறிவுறுத்தினர். எனினும் விபத்துகள் நடப்பது குறையவில்லை. இதனால் பொதுமக்கள் பயந்துவிட்டனர்.
இந்த அச்சத்தை உணர்ந்த அதிகாரிகளும், பாலத்தை கொஞ்ச நாட்கள் மூடிவைத்து, ஆய்வு செய்தனர். பிறகு மறுபடியும் திறந்தனர். பாலம் திறந்த அன்றே இன்னொரு நபர் பைக்கில்இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டார். ஏற்கனவே பயத்தில் உள்ள மக்களுக்கு இந்த சம்பவங்கள் கூடுதல் கலக்கத்தை தந்தது.
பாலம் பலிவாங்க காரணம் என்ன? என்பது குறித்த யூகமான தகவல்கள் பரவ ஆரம்பித்தன. சரியான முறையில் கட்டப்படாதுதான் விபத்துக்கு காரணம் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து, அமைச்சர் செந்தில்பாலாஜியே நேரடியாக விசிட் அடித்தார். கலெக்டர், அதிகாரிகளுடன் சேர்ந்து விபத்து தொடர்பாக ஆய்வு நடத்தினார். இதற்காக ஒரு ஸ்பெஷல் குழுவும் அமைக்கப்பட்டது.
அந்த குழுவானது, விபத்துக்கான காரணங்கள் ஆய்வு செய்யப்படும் என்றும், தேவைப்பட்டால் பாலத்தை இடித்து மறுகட்டமைப்பு செய்யப்படும் என்றும் உறுதிகூறப்பட்டது. அந்தவகையில், கலெக்டர் சமீரன் தலைமையில் சென்னை ஐஐடி என கட்டடவியல் துறை முனைவர் கீதா கிருஷ்ணன் ராமதுரை தலைமையில், விபத்து நிகழ்ந்த இடங்களையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. அதில், அந்த அறிக்கையில், ‘பாலத்தில் நடந்த பெரும்பாலான விபத்துகளுக்கு வாகன ஓட்டிகள் அதிவேகமாக வாகனங்களை இயக்கியதுதான் காரணம்.
பாலத்தின் சீரமைப்பு ஏற்றுக் கொள்ளும் வகையிலே உள்ளது. இப்போது உள்ள கட்டமைப்பில் வாகன ஓட்டிகள் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால் மட்டுமே பாதுகாப்பானது.
பாலத்தில் குறுகலான அபாயகரமான வளைவுகளில் 150 மீட்டருக்கு முன்பாக LED திரையில் வேகத்தை குறைத்துக் கொள்ளும்படி எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். வேகமாக வந்தால் கடுமையான நடவடிக்கை பாயும்.
ரப்பர் தடுப்புகள் இரு சக்கர வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்தி வேகத்தை தன்னுள் ஈரக்கும். இதனால் வேகம் குறைந்து விபத்துக்கள் நடக்காது. கான்கிரீட் வேகத்தடை கனரக வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தினாலும், இரு சக்கர வாகனங்களுக்கு ரப்பரில் செய்யப்பட்ட கிராஸ் பேரியர் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.