கோவை மாவட்டம் வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண வால்பாறை டான்டீ இளைஞர்கள் ஜிம் மணி, ஜெபக்குமார், செந்தில்,சந்தோஷ் உள்ளிட்டோர் ஒரு சிறப்பு கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்தனர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதன்படி நேற்று மாலை சின்கோனா முதல் பிரிவில் டான்டீ இளைஞர்கள் தலைமையில் டான்டீ மக்களின் அடிப்படை உரிமைகள் கோரிக்கை ஆலோசனை சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் அறிவித்து அரசனை வெளியிட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தரவேண்டிய தினப்படி 434 ரூபாயை காலதாமதம் செய்யாமல்
உடனடியாக வழங்கிடவும் மேலும் வருகிற தீபாவளிக்கு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்கிடவும் மற்றும் தொழிலாளர்களுக்கான பணப்பலன்கள், நிலுவை தொகைகளை உடனடியாக கால தாமதம் செய்யாமல் வழங்கிடவும் டான்டீ தேயிலை தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரக்கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் மற்றும் தமிழக முதல்வரின் கவணத்திற்க்கும் கொண்டு செல்லும் வகையில் கவண ஈர்ப்பு ஆர்பாட்டம் சின்கோனா மேலாளர் அலுவலகம் முன்பு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் CITU பரமசிவம், வால்பாறை மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆண்ட்ரூஸ், லோகேஸ், மனோஜ், செய்யது அலி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.