கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வால்பாறையில் இருந்து விசேஷ நாட்களில் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல வால்பாறையில் இருந்து நேரடி ரயில் சேவை இல்லாததால், பொள்ளாச்சி மற்றும் கோவை சென்று சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வால்பாறையில் ரயில்வே முன்பதிவு மையம் வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். தொடர் முயற்சியால், வால்பாறையில் தெற்கு ரயில்வே முன்பதிவு தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை அடுத்து
வால்பாறை தபால் நிலையத்தில் ரயில்வே முன்பதிவு துவங்கியதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-M.சுரேஷ் குமார்.