கோவையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், நாளை குளங்களில் கரைக்கப்பட உள்ளதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், நாளை மதியம் 1:00 மணிக்கு குனியமுத்தூர் தர்மராஜா கோவிலில் இருந்து புறப்பட்டு, பாலக்காடு ரோடு வழியாக குனியமுத்தூர் குளத்திலும், 2:00 மணிக்கு போத்தனூர் சாரதா மில் ரோட்டில் துவங்கி, சுந்தராபுரம் வழியாக பொள்ளாச்சி ரோட்டில் சென்று குறிச்சி குளத்திலும், கரைக்கப்பட உள்ளன. இதனால் நாளை காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை, நகருக்குள் லாரிகள் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாலக்காடு முதல் உக்கடம் செல்லும் வாகனங்கள், காலை 11:00 மணி முதல் கோவைப்புதூர் – குளத்துப்பாளையம் – ஆசிரம் பள்ளி சந்திப்பு – புட்டுவிக்கி சாலை வழியாகவும்; உக்கடம் முதல் பொள்ளாச்சி சாலை செல்லும் வாகனங்கள், சுங்கம் — ராமநாதபுரம் — நஞ்சுண்டாபுரம் — சாரதா மில் ரோடு – தக்காளி மார்க்கெட் வழியாகவும்; உக்கடம் முதல் பாலக்காடு சாலை செல்லும் வாகனங்கள் பேரூர் பைபாஸ் -சேத்துமா வாய்க்கால் செக்போஸ்ட்- வழியாக, புட்டுவிக்கி ரோடு – குளத்துப்பாளையம் வழியாகவும்;
பொள்ளாச்சி முதல் பாலக்காடு ரோடு செல்லும் வாகனங்கள், ‘எல் அண்ட் டி’ பைபாஸ் சாலை வழியாக, மதுக்கரை மார்க்கெட் ரோடு – பிள்ளையார்புரம் சந்திப்பு – சுகுணாபுரம் வழியாகவும்; பொள்ளாச்சி முதல் உக்கடம் செல்லும் வாகனங்கள், கற்பகம் கல்லூரி சந்திப்பு – ஈச்சனாரி – சுந்தராபுரம் -ஆத்துப்பாலம் வழியாக செல்லும் வகையிலும், போக்குவரத்து மற்றும் செய்யப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.