தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகின்ற கோவையில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் தென் மாவட்ட தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பணியாற்று வருகின்றார்கள். அதேபோல் கோவையில் தயாரிக்கப்படுகின்ற மின்மோட்டார் பம்பு செட் முதல் கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் தென் மாவட்டங்களில் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த பொருட்களை ஏற்றிச் செல்லவும் ரயில் சேவை மிக அவசியம். அதேபோல் தொழில் சேவைகள் அல்லாது மருத்துவக் கல்வி, பள்ளி கல்வி, உயர்கல்வி மற்றும் தரமான நவீன மருத்துவ சிகிச்சை பெற கோவை மருத்துவமனைகள் நோக்கி தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள், மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் படை எடுக்கின்றனர்.
இப்படி பல தேவைகளுக்காக தென் மாவட்டங்களில் இருந்து கோவைக்கு பயணிக்கும் பொது மக்களுக்கு பேருந்து சேவை மட்டுமின்றி ரயில் சேவை மிக அத்தியாவசியமானதாக இருக்கிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு கோவையிலிருந்து மதுரைக்கு என பிரத்தியோகமாக எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இயங்கி வந்தது. இந்த சேவை திடீரென ரத்து செய்யப்பட்டதால் தென் மாவட்ட மக்கள் மற்றும் கோவை மாவட்ட பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.
அன்றிலிருந்து இன்று வரை 14 ஆண்டுகள் கோயம்புத்தூர் – மதுரை எக்ஸ்பிரஸ்க்கு கோரிக்கை விடுத்து வந்தார்கள். இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மத்திய மற்றும் தென்னிந்திய ரயில்வே துறையிடம் தொடர்கோரிக்கை வைத்து வந்தனர்.
மதுரையில் இருந்து காலை 7:25 மணிக்கு புறப்படும் ரயில் திண்டுக்கல் பழனி பொள்ளாச்சி வழியாக கோவைக்கு பகல் 12:45க்கு வந்தடையும் மீண்டும் பிற்பகல் 2:55 மணிக்கு புறப்பட்டு இரவு 7:35 மணிக்கு சென்றடையும். அதன்படி இதன் பயன் நேரம் 5 மணி நேரமாகும் மதுரை முதல் கோயம்புத்தூர் வரை 21 இடங்களில் நின்று வருவதனால் நாள்தோறும் மூன்று ஆயிரம் பயணிகள் இந்த ரயில் மூலம் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.
(மதுரை கூடல் நகர், சமயநல்லூர், சோழவந்தான், வாடிப்பட்டி, கொடைக்கானல் ரோடு, அம்பாத்துறை, திண்டுக்கல் சந்திப்பு, அக்கரைப்பட்டி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, பழனி வாடி ரோடு, உடுமலைப்பேட்டை, சொகோமங்கலம், பொள்ளாச்சி சந்திப்பு, கிணத்துக்கடவு, போத்தனூர், கோவை) இரண்டாம் நிலை இருக்கையில் கொண்ட பன்னிரண்டு சாதாரண பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த ரயிலில் பயணம் செய்ய திருநெல்வேலி திருச்செந்தூர் உள்ள தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு இணைப்பு முறையாக இந்த ரயில் கோவைக்கு 12:45 மணிக்கு வந்தடைந்த உடன் பெங்களூர் சென்னை எர்ணாகுளம் மார்க்கமாக புறப்படுகின்ற ரயில்களுக்கு இணைப்பு ரயிலாக இந்த ரயில் இயல்பாக அமைந்துவிடும்.
இதேபோன்று கோவையில் இருந்து 2 05 மணிக்கு புறப்படும் ரயில் மதுரைக்கு 7:35 மணிக்கு சென்றடைகின்ற நிலையில் திருநெல்வேலி திருச்செந்தூர் உள்ள தென் மாவட்டங்களில் வழியாக பயணிக்கும் பயணிகளுக்கு இணைப்பு வழிகளாக கோவை மற்றும் மதுரையில் அமைய உள்ளது.
எனவே ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது கோவை மதுரையில் தென் மாவட்ட பயணங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கின்ற ரயில் சேவை என்பதால் நீண்ட போராட்டங்களுக்குப் பின்னர் இந்த ரயில் சேவையை கொண்டு வர போராடியவர்களிடம் நாம் பேசினோம். அப்போது பேசிய சமூக ஆர்வலர் செந்தில் இந்த ரயில் கூடுதலாக ஏசி கோச்சுகள் அதாவது குளிர்சாதன பெட்டிகள் அமைக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.
நெல்லை வரையிலான நீண்ட விரைவு ரயில் சேவையை அறிவிக்க வேண்டும் என பயணிகள் தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்திருக்கிறது. அவ்வாறு கோவை நெல்லை சேவையை விரைவுப்படுத்தினால் இந்த ரயில் ஒட்டுமொத்தமாக கோவையை தென் மாட்டத்துடன் இணைக்கும் ரயில் சேவையாக அமையும் என கருத்து தெரிவித்திருக்கின்றார்.
-ஹனீப், கோவை.