60ஆம் வயது, 70ஆம் வயது, 80ஆம் வயது, 90 ஆம் வயது என மூத்த தம்பதிகளுக்கு கோவையை சேர்ந்த ரக்ஷா அமைப்பினர் நடத்தி வைத்த முப்பெரும் கல்யாண வைபவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பல ஆண்டுகள் தம்பதிகளாகச் சேர்ந்து வாழ்ந்து பிள்ளைகள், பேரன், பேத்தி, கொள்ளு பேரன் வரை பார்த்த மூத்தவர்களிடம் ஆசி வாங்கும் போது தலைமுறையும் செழிக்கும் என்பது ஐதீகம். இந்நிலையில் கோவையில் இது போன்று 60 ஆம் வயது, 70ஆம் வயது, 80 ஆம் வயது மற்றும் 90 ஆம் வயது என முப்பெரும் கல்யாண வைபவத்தை நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர் ரக்ஷா மகளிர் அமைப்பினர்.
அதன் படி பத்திரிக்கை அச்சடித்து, பிரம்மாண்ட அரங்கத்தில் முப்பெரும் கல்யாண வைபவம் மற்றும் நவதி காலஸ்வரூப சாந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 60 ஆம் வயதில் நடைபெறும் சஷ்டியப்த பூர்த்தி, 70ல் நடைபெறும் பீமரதசாந்தி, 80ல் நடைபெறும் சதாபிஷேகம் மற்றும் 90 வயதான 22 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் நவதி காலஸ்வரூப சாந்தி ஆகிய வைபவங்கள் நடைபெற்றது.
விழாவில் முன்னதாக அதிகாலை கணபதி பூஜை, புண்யாஹவாஜனம், சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு பூர்ணாஹூதி, தீர்த்தாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மாங்கல்யதாரணம், பவளமணி தாரணம், முத்துமணி தாரணம் மற்றும் நவதி காலஸ்வரூப சாந்தி விமரிசையாக நடைபெற்றது.
தொடர்ந்து தம்பதிகளிடம் அனைவரும் ஆசிர்வாதம் பெற்றனர். கோவை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மூத்த தம்பதிகள் கலந்து கொண்ட முப்பெரும் கல்யாண வைபவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தொடர்ந்து இதில் சிறப்பு விருந்துகளும் பரிமாறப்பட்டது.
– சீனி, போத்தனூர்.