கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்குட்பட்ட வீடுகள் மற்றும் கடைகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு நகராட்சி
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூய்மைப் பணியாளர்கள் நேரில் சென்று பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துங்கள் அப்பொழுதுதான் பிளாஸ்டிக்கை முழுமையாக ஒழிக்க முடியும் என மக்களிடம் எடுத்துரைத்து முக்கிய பகுதிகளில் விழிப்புணர்வு நோட்டீசை சுவர்களில் ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
வால்பாறை நகராட்சி ஆணையாளர் அழகு சுந்தரசெல்வி அதிரடி நடவடிக்கையால் மக்கள் மகிழ்ச்சியுடன் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
மீண்டும் மஞ்சப்பை எனம் திட்டத்தை கடந்த டிசம்பர் மாதம் தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார்.