கோவை மாவட்டம் வால்பாறை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே 4.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சி சார்பில் அம்மா படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் கழிவுநீர் செல்வதால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட ஏதுவாக உள்ளது அதேசமயம் நோய் பரவும் அபாயம் உள்ளது.
மேலும் படகு இல்லம் செயல்பாட்டுக்கு வராமல் தவணையில் உள்ளது. இந்நிலையில்
வால்பாறை வரும் சுற்றுலா பயணிகள் அம்மா படகு இல்லத்தை காண்பதற்காக ஆர்வத்துடன் சென்று ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறார்கள். அம்மா படகு இல்லத்தை புதிப்பித்து செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வால்பாறை மக்களும் சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.