தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அரசு போக்குவரத்து பணிமனையை திடீர் ஆய்வு மேற்கொண்டு பேருந்துகள் பராமரிப்பு குறித்து கேட்டறிந்தார் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி ஒட்டப்பிடாரம் விளாத்திகுளம் திருச்செந்தூர் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன அதில் நகராட்சி மற்றும் மாநகராட்சி பேருந்துகள் நல்லா நிலையும் கிராம ஊராட்சி பாஞ்சாயத்து இருக்கின்ற பேருந்துகள் அனைத்தும் ஓட்டை மழை நாட்களில் பஸ்ஸில் பயணம் செய்யும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். இதையடுத்து பொது மக்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் அளித்தனர்.
தூத்துக்குடி கேடிசி நகரில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்கள் மற்றும் மதுரை திருநெல்வேலி விருதுநகர் நாகர்கோவில் தென்காசி உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பணிமனையில் இயக்கப்படும் பேருந்துகளில் மேற்குறைகள் ஒட்டை விழுந்து மழைக்காலங்களில் பேருந்துக்குள் தண்ணீர் வடிவதால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் பழுது காரணமாக அந்தந்த பகுதியில் பேருந்துகள் நிறுத்தப்படுவதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர்.
இதை தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் திடீரென அரசு போக்குவரத்து பணிமனையை ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிமனையில் இருந்து பேருந்து இயக்கப்படுவதும் பணிமனையில் பேருந்துகள் பழுது நீக்க பராமரிப்பு பணிகள் குறித்தும் பணிமனை மேலாளரிடம் கேட்டறிந்தார். மேலும் பொது மக்களிடம் இருந்து எந்தவித புகார் வராத அளவிற்கு அரசு பேருந்துகளை குறித்த நேரத்தில் இயக்கப்பட வேண்டும் பழுதுகள் பராமரிப்பு முறையாக செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
அப்போது மழைக்காலங்களில் பணிமனையில் குளம் போல் தண்ணீர் தேங்குவதாக அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் தெரிவித்தனர். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். பொது மக்களிடம் இருந்து தொடர்ந்து புகார் வந்ததை தொடர்ந்து பணிமனை ஆய்வு மேற்கொண்டு பராமரிப்பு பணியை முறையாக மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்த ஆய்வில், அரசு போக்குவரத்து மண்டல மேலாளர் பழனியப்பன், வட்டாட்சியர் செல்வக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி நவீன் பாண்டியன், உதவி அலுவலர் சுஸ்மா, அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.