தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் பகுதியில் நாளை (சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது குறித்து நகர்ப்புற மின்சாரவாரிய செயற்பொறியாளர் ராம்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: –
ஓட்டப்பிடாரம், ஓசநூத்து, ஆரைக்குளம், குலசேகரநல்லூர், பாஞ்சாலங்குறிச்சி, வெள்ளாரம், க. சுப்பிரமணியபுரம், குறுக்குச்சாலை, புதியம்புத்தூர், சில்லாநத்தம், சாமிநத்தம், கொம்பாடி தளவாய்புரம், தெற்கு வீரபாண்டியபுரம், ஆவாரங்காடு, அகிலாண்டபுரம், முப்பிலிவெட்டி, பரும்பூர், வேடநத்தம், கே. குமாரபுரம் ஆகிய பகுதிகளிலும், சொக்கநாதபுரம், வாஞ்சி மணியாச்சி சந்திப்பு, மணியாச்சி, வடமலாபுரம், பாறைக்குட்டம், மேலப்பாண்டியாபுரம், சண்முகபுரம், மேலப்பூவானி, கீழப்பூவானி, அக்கநாயக்கன்பட்டி, லட்சுமிபுரம், ஒட்டநத்தம், மலைப்பட்டி, கல்லத்திகிணறு, முறம்பன், சங்கம்பட்டி, சுந்தரராஜபுரம், பரிவில்லிக் கோட்டை, அயிரவன்பட்டி, கோபாலபுரம், கூட்டுப்பண்ணை கோபாலபுரம், கொத்தாளி, தென்னம்பட்டி, கோவிந்தாபுரம், கொல்லங்கிணறு, மருதன்வாழ்வு, டி. அய்யப்பபுரம், வேப்பங்குளம், கலப்பபட்டி, கீழக்கோட்டை காலனி ஆகிய பகுதிகளிலும் மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.