கருங்காலக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொட்டாம்பட்டி வட்டாரத்தைச் சார்ந்த 220க்கும் மேற்பட்ட ஊராட்சி பணியாளர்கள் கலந்து கொண்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
கருங்காலக்குடி வட்டார மருத்துவ அலுவலர் சண்முகபெருமாள் தலைமையில் நடைபெற்ற இம்மருத்துவ முகாமில், கருங்காலக்குடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் குழுவினரும்,
உசிலம்பட்டி தலைமை மருத்துவமனை சிறப்பு மருத்துவரும் கலந்து கொண்டு பணியாளர்களுக்குத் தேவையான சிறப்பு மருத்துவ ஆலோசனைகளையும், சிகிச்சையினையும் வழங்கினார்கள்.
இம்முகாமில் இருதய பரிசோதனை, இரத்தப்பரிசோதனை, கண் மற்றும் பல் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தகுந்த ஆலோசனைகளும், சிகிச்சையும் வழங்கப்பட்டது.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.