கடந்த மாதம் 12ஆம் தேதி ஏலப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி படித்து வந்த பள்ளி கூண்டை சார்ந்த ஜோசுவா என்ற 16 வயது மாணவன் காணாவில்லை. காலையில் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் பள்ளி வாகனத்தில் வந்து வீட்டிற்கு அருகில் இறங்கியுள்ளான். Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ பின்னர் அவன் வீட்டிற்கு செல்லவில்லை என தகவல் தெரிய வந்தது பெற்றோர்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் தன் மகன் வீட்டிற்கு வரவில்லை என்பது அறிந்து பின்னர் அக்கம் பக்கத்திலும் பக்கத்தில் உள்ள உறவினர்கள் வீட்டிலும் தேடி உள்ளனர் ஆனால் அதில் எந்த பயனும் இல்லை. இதைத்தொடர்ந்து பீரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரை ஏற்ற காவல்துறை இடுக்கி எஸ் பி குரியா கோஸ் அவர்களின் மூலமாக ஒரு சிறப்பு குழுவை உருவாக்கி மாணவனை தேட ஆரம்பித்தனர். மாணவன் கைபேசி உபயோகப்படுத்தாததால் அவனை கண்டுபிடிப்பதில் மிகவும் சிரமம் ஏற்பட்டது பின்னர் அவனுடன் படித்த நண்பர்களுடன் விசாரணை செய்தும் கண்டுபிடிக்க முடியவில்லை ஒரு வழியாக அவன் குமுளி செக் போஸ்ட் வழியாக செல்வதை அங்கு உள்ள சில சிசிடிவி கேமரா மூலமாக கண்டறிந்து.
பின்னர் இந்த புகாரனது தமிழ்நாடுகாவல்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது தமிழ்நாடு காவல்துறையினர் செய்த விசாரணையில் மாணவன் திருப்பூரில் இருப்பதாக தெரியவந்தது பின்னர் அந்த மாணவனை கண்டு பிடித்து அழைத்து கேரள மாநிலம் பீரிமேடு காவல்துறையினரிடம்ஒப்படைக்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
–ஜான்சன். மூணார்.