கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வரும் நிலையில் இவர்களுக்கு தினக்கூலியாக 400 ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலியாக 606 ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலையை புறக்கணித்து
பொள்ளாச்சி காந்தி சிலை முன்பு ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது
காந்தி ஜெயந்தி முன்னிட்டு, காந்தி சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த அவருடைய திருவுருவ படத்திடம் எங்களது கோரிக்கையை அரசிடம் கொண்டு செல்லவேண்டும் என வலியுறுத்தும் வகையில் கோரிக்கை மனுவை காந்தியிடம் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதேசமயம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் அவர்களின் கோரிக்கையை கேட்டறிந்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.