கார் சிலிண்டர் வெடிப்பு எதிரொலியாக, கோவையின் பாதுகாப்பை வலுப்படுத்த கரும்புக்கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையத்தில் புதிதாக காவல் நிலையங்கள் அமைக்கவும், வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க சிறப்புப்படையை உருவாக்கவும், மாநிலத்தின் உளவுப் பிரிவில் கூடுதல் காவலர்களை நியமிக்கவும் முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கை என்ஐஏ விசாரிக்க முதல்வர் பரிந்துரைத்துள்ளார்.
முன்னதாக, கோவையில் கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். அவரது வீட்டில் நடத்திய சோதனையில் பொட்டாசியம் குளோரைடு, அலுமினியம் நைட்ரேட், சல்பர் உள்ளிட்ட வெடிபொருட்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் நேற்று (26ம் தேதி) என்ஐஏ அதிகாரிகள் முபீனின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்தும் சம்பவம் நடந்த இடத்திலும் விசாரணை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-Ln. இந்திராதேவி முருகேசன் & சோலை. ஜெய்க்குமார்.