பொதுமக்களை ஈர்க்கும் வகையில், குறிச்சி குளக்கரையில் தமிழ் எழுத்துக்களுடன் திருவள்ளுவர் சிலை, ஜல்லிக்கட்டு காளை சிலை வைக்க, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில், கோவையில் குளக்கரைகளில் நடந்து வரும் பணிகளை, 2023 மார்ச்சுக்குள் முடிக்க, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கிருஷ்ணாம்பதி, செல்வம்பதி மற்றும் முத்தண்ணன் குளங்களுக்கு ஆர்.எஸ்.புரம், காந்திபார்க், தடாகம் ரோடு, பூசாரிபாளையம், வீரகேரளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் சுற்றிப்பார்க்க வருவர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதன் பயன்பாடு அதிகமாக இருக்கும் என்பதால், பொதுமக்கள் அமர்வதற்கு தேவையான இருக்கை வசதி செய்ய வேண்டும். குழந்தைகளுக்கான விளையாட்டு திடல்கள் ஏற்படுத்த வேண்டும். ஊழியர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி, பணியை விரைவுபடுத்துவதோடு, தரமாக மேற்கொள்ள வேண்டும் என, ஒப்பந்த நிறுவனத்தினருக்கு கமிஷனர் அறிவுறுத்தினார்.
சிறுவர்கள் விளையாடுவதற்காக, முத்தண்ணன் குளக்கரையில் அமைத்து வரும் ‘மேஸ்’ விளையாட்டு வடிவமைப்பை பார்வையிட்ட அவர், ‘குழந்தைகள் ஜாலியாக விளையாட வேண்டும். பக்கச்சுவர்கள் கலர் புல்லாக இருக்க வேண்டும்.
நானே சென்றாலும், வழி தெரியாமல் திக்கு முக்காட வேண்டும். அந்தளவுக்கு குழந்தைகள், பெரியவர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைப்பை, இறுதி செய்ய வேண்டும்’ என அறிவுறுத்தினார்.
குறிச்சி குளக்கரையில் ஆய்வு மேற்கொண்ட கமிஷனர் பிரதாப், ‘தமிழ் எழுத்துக்களுடன் திருவள்ளுவருக்கு முழு உருவச் சிலை, தமிழர் கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் ஜல்லிக்கட்டு காளை சிலைகள் அமைப்பதோடு, பாரம்பரிய ஓவியங்கள் வரைய வேண்டும்’ என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது, தெற்கு மண்டல தலைவி தனலட்சுமி, உதவி கமிஷனர் அண்ணாதுரை, உதவி நிர்வாக பொறியாளர் கருப்பசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.