கேரளா மாவட்டம் மாநிலம் இடுக்கி மாவட்டம் மிகவும் முக்கியமான சுற்றுலாத் தளமாக கருதப்படும் மூணாறு பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம் ஆனால் சுற்றுலாத்தலமாக கருதப்படும் மூணார் பகுதியில் நெகிழிகள் உபயோகப்படுத்தக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தடையும் மீறி ஆங்காங்கே நெகிழிகள் உபயோகப்படுத்தப்பட்டு கொட்டப்பட்டுள்ளதும் வியாபார கடைகளின் மூலமாக வெளியேறும் கழிவுகள் மூணார் மையப் பகுதியில் பாய்ந்து கொண்டிருக்கின்ற முதரப்புழா ஆற்றில் கலக்கப்படுவதால் இயற்கை மாசு அடைந்துள்ளது . மூணாறில் மையப் பகுதியாக அமைந்திருக்கும் ஆறு வரும் சுற்றுலாப் பயணிகளை முதலில் கண் கவரும் விதமாக உள்ளது.
ஆனால் தற்பொழுது ஜனத்தொகையின் பெருக்கத்தினாலும் அதிக கடைகள் உருவானதாலும் வீட்டு கழிவுகள் கடைகளின் கழிவுகள் மற்றும் தங்கும் விடுதிகளின் கழிவுகள் நேரடியாக ஆற்றில் கலந்து விடப்படுகின்றன. இடுக்கி மாவட்டம் சுற்றுலா பகுதிகளில் இயற்கையை மாசுபடுத்துவதுமாக எந்த காரியமும் செய்யப்படக்கூடாது என்ற தடைவித்த போதிலும் இவை அனைத்தும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இதை பல ஊடகங்களிலும் ஒளிபரப்பு தலங்களிலும் ஒளிபரப்பப்பட்ட போதிலும் அரசு இதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கவில்லை என்பதே உண்மை. உடனடியாக மூணாறில் உள்ள இயற்கை வளங்களை காப்பாற்ற அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இயற்கையை காப்பாற்ற ஆங்காங்கே பதாகிகளும் தகவல் பலகைகளும் வைக்க வேண்டும் சுற்றுலா பயணிகள் இயற்கையின் மீது அக்கறை கொண்டவர்களாகவும் மாற்ற அரசு முயற்சி எடுக்க வேண்டும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.