திறமை வாய்ந்த விளையாட்டு வீர்ர்களை உருவாக்கும் விதமாக சிறு வயது முதலே முறையான பயிற்சி அளிக்கும் வகையில் கோவையில் மூத்த விளையாட்டு வீர்ர்கள் இணைந்து டி.எஸ்.ஸ்போர்ட்ஸ் அகாடமி எனும் விளையாட்டு பயிற்சி மையத்தை துவக்கியுள்ளனர்.
கோவை தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி. முன்னால் கால்பந்து வீர்ராகவும்,மெட்ராஸ் கால்பந்து அணியின் கேப்டனாகவும் இருந்த இவர்,சில ஆண்டுகள் வெளிநாட்டு வீர்ர்களுக்கு பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் தமது சொந்த ஊரான கோவை தெலுங்குபாளையத்தில் உள்ள தமது சொந்த இடத்தை முழுவதும் விளையாட்டு வீர்ர்களுக்கான பயிற்சி மையமாக உருவாக்கி உள்ளூர் சுமார் ஐந்து ஏக்கர் நிலத்தில் உருவாகீ உள்ள பயிற்சி மையம் குறித்து தெய்வசிகாமணி கூறுகையில்:
சர்வதேச தரத்திலான பயிற்சி மையமாக இதனை உருவாக்கி உள்ளதாகவும்,இங்கு கால்பந்து, கிரிக்கெட், ஷாட் புட், டிஸ்க் த்ரோ, ஜாவ்லின் த்ரோ, நீளம் மற்றும் உயரம் தாண்டுதல் மற்றும் கைப்பந்து மற்றும் பூப்பந்து என அனைத்து விளையாட்டுகளுக்குமான பயிற்சி மையமாக இதனை உருவாக்கி உள்ளதாகவும், அனைத்து விளையாட்டுகளுக்கும் தமிழக அளவில் முன்னனி பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்க உள்ளதாகவும்,
குறிப்பாக வெறும் பயிற்சி மையமாக இல்லாமல் பயிற்சி பெறுபவர்களின் சரியான திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு உடல் ரீதியாக பயிற்சி அளிப்பதற்கு மருத்துவ குழுவினரும் இணைந்து செயல்பட உள்ளதாக குறிப்பிட்டார். சரியான தகுதியான திறமைகளை உருவாக்கி சர்வதேச அளவில் இந்திய குறிப்பாக தமிழக வீரர்களை உருவாக்குவாதே இந்த பயிற்சி மையத்தின் நோக்கம் என தெரிவித்தார்.
– சீனி, போத்தனூர்.