கோவை தெற்கு மாவட்டம் விஸ்வகர்மா சமூக நலச் சங்கம் மற்றும் தமிழ்நாடு, பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூக கூட்டமைப்பு சார்பாக விஸ்வகர்மா ஜெயந்தி ஆராதனை விழா இன்று மாலை நிலவேம்பு சித்தர் ஸ்ரீ பாபுஜி சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக குறிச்சி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பொங்காளியம்மன் திருக்கோயிலில் சிறப்பு பூஜையுடன் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஸ்ரீ பாபுஜி சுவாமிகள் தலைமையில் ஊர்வலமாக சுந்தராபுரம் பகுதி வரை நடந்து சென்றனர். தொடர்ந்து விஸ்வகர்மா ஜெயந்தி ஆராதனை விழா நடைபெற்றது.
இது குறித்து நிலவேம்பு சித்தர் ஸ்ரீ பாபுஜி சுவாமிகள் கூறுகையில், “விஸ்வகர்மா மக்கள் எழுச்சி பெற வேண்டி தமிழகம் முழுவதும் விஸ்வகர்மா ஜெயந்தி விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை புறநகர் மாவட்டம் சார்பாக தமிழ்நாடு பாண்டிச்சேரி கூட்டமைப்பு சார்பாகவும் கோவை தெற்கு மாவட்டம் விஸ்வகர்மா சமூக நல சங்கத்தின் சார்பாகவும் சுமார் 1000 பேர் கலந்து கொண்டு விஸ்வகர்மா ஜெயந்தி விழா சிறப்பாக நடத்தப்பட்டது. இதில் விஸ்வகர்மா அனைத்து கட்சி முக்கிய தலைவர்களும் பங்கேற்றனர்.
இந்த ஜெயந்தி விழா முக்கியமாக விஸ்வகர்மா மக்களின் அரசியல் எழுச்சிக்காகவும், அரசியலில் முக்கியத்துவம் பெறுவதற்காகவும் நடத்தப்பட்டது. தமிழக முழுவதும் சுமார் 85 லட்சம் பேர் விஸ்வகர்மா சமூகத்தைச் சேர்ந்த மக்கள் உள்ளனர். கோவையில் 2 லட்சம் பேர் உள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் விஸ்வகர்மா சமுதாய மக்களின் முக்கிய பங்கும் ஆதரவும் அளித்து வருகின்றனர். எனவே அரசியலில் எழுச்சி பெற விஸ்வகர்மா சமூக மக்களின் ஜெயந்தி விழா இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது என்றார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
– சீனி,போத்தனூர்.