கோவை SNS குழுமம் இந்த வருடம் 25ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. அதன் வெள்ளி விழாவை சிறப்பாக கொண்டாட இசை இளவரசர் என மக்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சிறப்பு விருந்தினராக வந்தார்.
ஸ்என்எஸ் குழும மாணவர்களை மகிழ்விக்க ‘லவ் யூ யுவன்’ நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர். இதன் தொடக்கமாக யூடியூப் ஆப்பில் 12000 லைக்ஸ்களை கொண்ட மாரி 2 படத்தின் ரவுடி பேபி என்ற பாடலை யுவன் பாட, SNS குழும மாணவர்கள் 11,000 பேர் சேர்ந்து ஃப்ரீ ஸ்டைல் டான்ஸ் ஆடி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
இதில் மற்றொரு சிறப்பு அம்சமாக இசை அமைப்பாளர் யுவன் அவர்கள் சினிமா துறையில் 25ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறார்.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்க யூடியூப் பிரபல தொகுப்பு குளுமமான ‘பிளாக் ஷீப்’ டீம் விக்னேஷ் மற்றும் அரவிந்த் சிறப்பாக நடத்தினர். இன்று பிளாக் ஷீப் டீம்’ இன் வெற்றி பயணமாக ‘பிளாக் ஷீப் டிவி’ 24/7மும் கான சேனல் ஒன்றையும் ஆரம்பித்தை மேடையில் அறிவித்தனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்திருந்தனர். கோவை காவல்துறையும் தனது பாதுகாப்பு பணியை மிகவும் சிறப்பாக செய்திருந்தனர். மாணவ மாணவிகளின் சிறப்பான கொண்டட்டத்துடன் இனிதே நிறைவுற்றது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-மு.ஹரி சங்கர், கோவை வடக்கு.