சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இளைஞர் அணியினருக்கான திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் சங்ககிரி வாசுதேவ் மகாலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் டி.எம்.செல்வகணபதி Ex.mp தலைமை தாங்கினார்.
இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் முன்னிலை வசித்தார்.
பயிற்சி பாசறை கூட்டத்தில் முனைவர் சபாபதி மோகன் தமிழ் கா.அமுதரசன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
600க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டத்தில்
கலந்து கொண்டனர்
நாளைய வரலாறு செய்திக்காக,
-ச.கலையரசன், மகுடஞ்சாவடி.