ஏழாவது தேசிய ஆயுர்வேத மருத்துவ தினத்தையொட்டி (23-10-22) சிவகங்கையில் உள்ள அன்னை முதியோர் இல்லத்தில் ஆயுர்வேத மருத்துவ முகாம் கடந்த வெள்ளியன்று (21/10/2022) அன்று நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சிவகங்கை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பிரபாகரன் தலைமை தாங்கினார். முதியோர் இல்லத்தை நடத்திவரும் ஜான் பிரிட்டோ முன்னிலை வகித்தார்.
இடையமேலூர் ஆரம்ப சுகாதார நிலைய ஆயுர்வேத மருத்துவ அலுவலர் ஜெயஞானாம்பிகை முகாமுக்கான ஏற்படுகளை செய்திருந்தார்.
நிகழ்ச்சியில் ஆயுர்வேத மருத்துவம் மற்றும் உடல் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பிரபாகரன், அன்னை முதியோர் இல்லத்திற்கு ரூ.5000 மதிப்பிலான மளிகை பொருள்களை வழங்கினார். முதியோர் இல்லத்தில் உள்ள 25 நபர்கள் இம்முகாமில் பயனடைந்தார்கள்.
– பாரூக், சிவகங்கை.