தூத்துக்குடியில் தனக்கு அரசு வேலை வழங்க முதல்வர் உத்தரவிட்டும் மாவட்ட ஆட்சியர் பணி வழங்காமல் இழுத்தடிப்பதை கண்டித்து மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் ஆட்சியில் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் குண்டு கட்டாக தூக்கிச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டம் கீழவகை குளத்தை சேர்ந்தவர் வள்ளியம்மாள் மாற்றுத்திறனாளி ஆன இவர் கணவரால் கைவிடப்பட்டவர். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பத்தாம் வகுப்பு வரை படித்த இவர் தனக்கு ஏதாவது ஒரு பணி வழங்கும் படி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் வந்திருந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் நேரில் கோரிக்கை மனு அளித்தார். இதன்படி இவருக்கு உடனடியாக பணி வழங்கும் படி முதலமைச்சர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார். இந்த செய்தி அப்பொழுது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக வள்ளியம்மாளுக்கு எந்தவித பணியும் வழங்காமல் மாவட்ட ஆட்சியர் இழுத்தடிப்பதாக தெரிகிறது. இதனை கண்டித்து இன்று வள்ளியம்மாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவரிடம் காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை ஈடுபட்டும் அவர் ஒத்துக் கொள்ளாததால் இறுதியில் அவரை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்று அப்புறப்படுத்தினர் இந்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-வேல்முருகன், தூத்துக்குடி.