தூத்துக்குடியில் கடலில் குளித்தபோது நீரில் மூழ்கிய பிளஸ் 2 மாணவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி, தாளமுத்து நகர் சவேரியார் புரம், கிரேஸ் நகரை சேர்ந்தவர் மகேஷ் இவரது மகன் கிஷோர் (17). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். இன்று மதியம் தனது நண்பர்கள் 4 பேருடன் சிலுவைப்பட்டி கடலில் குளிக்க சென்றனர். அப்போது ஆழமான பகுதிக்கு கடலுக்குள் கிஷோர் சென்று விட்டார். இதையடுத்து கரை திரும்பிய அவரது நண்பர்கள் அளித்த தகவலின் பேரில் அங்குள்ள மீனவர்கள் கடலுக்குள் சென்று கிஷோரை தேடினர்.
ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் மற்றும் கடலோர காவல் படையினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடலில் மூழ்கி பள்ளி மாணவன் மாயமான சம்பவம் சிலுவைப்பட்டி கடற்கரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.