தூத்துக்குடி மாநகரில் முக்கிய பிரதான சாலையான 3ம் கேட் மேம்பாலம் இருந்து வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் இந்த மேம்பாலம் திறந்துவைக்கப்பட்டது.அதில் கனரக இலகு ரக வாகனங்கள் உள்பட பொதுமக்கள் நான்கு பகுதிகளிலும் சென்று பயன்படுத்தி வந்தனர். அதில் விரிசல்கள் விழுந்ததையடுத்து அதை சீர் செய்ய வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து பாலம் சீரமைக்கும் பணி இரவு பகலாக பணியாளர்களை கொண்டு நடைபெற்று வருகிறது. Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ தமிழ் நாட்டில் மட்டும் தான் அதிகப்படியான மேம்பாலம் உள்ளது. அதை போல் மேம்பாலம் பிரச்சினை அதிகமாம் வருகிறது. கரிகாலன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கல்லணை அணையும் தமிழ் நாட்டில் தான் உள்ளது அதை மனதில் கொண்டு தமிழ் நாடு அரசு ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதி பொறுப்புடனும் செயல்பாட வேண்டும்.
அப்பணியை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மேம்பாலம் பணிகள் நடைபெறுவதால் 2ம் கேட் 4ம்கேட், 1ம் கேட் ஆகிய பகுதிகளையும் பீச்ரோட்டையும் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் இப்பணி 10ம் தேதி வரை நடைபெற்று நிறைவு பணிகள் முடிந்து 11ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்துள்ளார்.
அதே போல் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளையும் விரைவாக மழைகாலத்திற்குள் முடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஆய்வின் போது மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் ஜோஸ்பர், பிரபாகர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி நிருபர்,
-வேல்முருகன்.