இஸ்லாமியர்களின் இறை துாதரான நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா மீலாது நபி விழாவாக அனைத்து பகுதியிலும் கொண்டாடப்படுகிறது..இந்நிலையில் கோவை குணியமுத்தூர் பகுதியில் தாஜூல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் ஹனபி சார்பாக நபிகள் நாயகம் உதய தின விழா மற்றும் மத நல்லிணக்க விழா நடைபெற்றது…குணியமுத்தூர் பெரிய பள்ளி வாசல் முன்பாக நடைபெற்ற விழா துவக்க நிகழ்ச்சியில், , தாஜூல் இஸ்லாம் சுன்னத் பள்ளி வாசல் தலைவர் முகம்மது இப்ராஹீம் தலைமை வகித்தார். Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ செயலாளர் அப்துல் ரஹ்மான் வரவேற்புரை ஆற்றினார்.முத்தவல்லி ஹாஜி அக்பர் அலி,மற்றும் நிர்வாகிகள் காஜா முகம்மது,அசனார்,பாரூக்,அப்துல் ஹக்கீம்,ரபீக்,சம்சுதீன்,சுலைமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மத நல்லிணக்க விழாவாக நடைபெற்ற இதில் மாமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார்,பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்..புத்தாடை அணிந்த சிறுவர், சிறுமியர் ஊர்வலத்தில் பங்கேற்றனர். சிறுவர்கள் தங்கள் கைகளில் மத நல்லிணக்கம், உலக அமைதி ஆகியவற்றை வலியுறுத்தும் வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். ஊர்வல நிறைவில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.
– சீனி,போத்தனூர்.