விஜயதசமியன்று கல்வி, கலைகள் என எதைத் தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பது நம்பிக்கை. நாளை விஜயதசமி. பெற்றோர் பலர், தங்கள் குழந்தைகளை விஜயதசமி அன்று பள்ளிகளில் சேர்ப்பது வழக்கம்.நாளை பல்வேறு கோவில்களில் ‘வித்யாரம்பம்’ நடைபெற உள்ளது. குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில், ‘அ’ என்று எழுத கற்று கொடுப்பது, ‘வித்யாரம்பம்’. பெற்றோர் பலரும் தங்கள் பிள்ளைக்கு முதன்முதலாக எழுத கற்று கொடுத்து, பள்ளியில் சேர்க்க உள்ளனர்.
இதற்காகவே, அரசு ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளை நாளை திறக்கப்பட்டிருக்க வேண்டும்; குழந்தைகளை எல்.கே.ஜி., அல்லது முதல் வகுப்பில் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் முன்வந்தால், ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், தொடக்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.சி.பி.எஸ்.இ., பள்ளி நிர்வாகிகள் சங்க தலைவர் மனோகரன் கூறுகையில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சிறப்பு அட்மிஷன் எல்.கே.ஜி., வகுப்புகளுக்கு உண்டு.
நர்சரி பள்ளிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கோவில்களில் நடத்தப்படும் வித்யாரம்பம்’ நிகழ்வு பள்ளிகளில் நடத்தப்படும். சில பள்ளிகள் சிறப்பு கட்டண சலுகைகளை அறிவித்துள்ளன. விரும்புவோர் அருகில் உள்ள பள்ளிகளை நாடலாம்,” என்றார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சி.ராஜேந்திரன், கோவை.