மத்தம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில், பழுதான கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியம், பிளிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மத்தம்பாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் பழுதான நிலையில் உள்ள வகுப்பறை கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கட்டடத்தை உடனடியாக அகற்றவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்தம்பாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளி, 70 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. இது நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பின், தற்போது, 1 முதல், 8ம் வகுப்பு வரையில் செயல்படுகிறது.
ஏறத்தாழ, 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இந்த வளாகத்திலேயே அங்கன்வாடி மையம் மற்றும் சத்துணவு மையங்கள் செயல்படுகின்றன. இரண்டிற்கும், 40 குழந்தைகள் தினமும் வந்து செல்கின்றனர். இப்பள்ளி வளாகத்துக்கு மேற்கு புறத்தில், 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய கட்டடம் பழுதான நிலையில் உள்ளது. மேற்கூரையும் அடிக்கடி பெயர்ந்து விழுகின்றன.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கட்டடம் பயன்பாடு இல்லாமல் கைவிடப்பட்டு விட்டது. குழந்தைகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இக்கட்டத்தை பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பலமுறை மனுக்கள் கொடுக்கப்பட்டும், அதிகாரிகள் நேரில் வந்து பார்த்து ஆய்வு செய்துவிட்டு சென்ற பின்னும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில்,’ பழுதடைந்த கட்டடத்தையொட்டி அங்கன்வாடி, சத்துணவு மையம் செயல்படுகின்றன. குழந்தைகள் கட்டடம் அருகில் அடிக்கடி வந்து செல்கின்றனர். பருவமழை தொடங்கிய நிலையில் கட்டடத்தை உடனடியாக அப்புறப்படுத்த, அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்க உள்ளோம்’ என்றனர்.
கோவை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்ட நிலையில், ஊரக பகுதிகளில் உள்ள சில பள்ளிகளின் பள்ளி மேலாண்மை குழுக்களில் நிதியின்மையால் பழுதடைந்த கட்டடங்கள் இடிக்கும் பணி தாமதமாகி வருகிறது. வடகிழக்கு பருவமழையால் அபாயங்கள் ஏற்படும் முன் இடிக்கப்படவேண்டிய பழைய கட்டடங்கள் ஊராட்சிகளில் உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.