கோவை மாவட்டம் பொள்ளாச்சி திருப்பத்தூரில் பயிற்சி துணை சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்த தீபசுஜிதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொள்ளாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் அவர் திடீரென்று சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனை அடுத்து
பெங்களூரைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான பிருந்தா தற்போது பொள்ளாச்சி சரகத்தில் உதவி சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்றுள்ளார்.
ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் பொள்ளாச்சி சரகத்தில் உதவி சூப்பிரண்டாக பொறுப்பேற்றுக் கொண்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-M.சுரேஷ்குமார்.