பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு, ஆறு லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 150 கிராம் போதை பொருளை கடத்தி வந்த இருவர் சிக்கினர்.கோவை, மதுக்கரையை அடுத்த வாளையார் சோதனைச் சாவடியில் நேற்று மாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அவ்வழியே கேரளா நோக்கி வந்த ஸ்கூட்டரை நிறுத்தி சோதனை செய்தனர், அதில் இருந்த இருவர், போதை பொட்டலங்கள் பதுக்கி வைத்தது தெரியவந்தது. இருவரும் ஸ்கூட்டரை போட்டுவிட்டு தப்பியோடினர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
துரத்திச் சென்ற போலீசார் இருவரையும் பிடித்தனர். விசாரணையில், கேரள மாநிலம், ஒற்றப்பாலத்தை சேர்ந்த அப்துல் ரசாக், 21, முகமது ஜெஸீர், 21 என தெரிந்தது. பெங்களூருவில் வசிக்கும் அனீஷ், 21, என்பவர் பெங்களூரு வரவழைத்து, 150 கிராம் எடையுள்ள ‘மெத்’ எனப்படும் போதைப்பொருளை கொடுத்ததாக தெரிவித்தனர்.
பெங்களூருவில் இருந்து பஸ்சில் கோவை வந்த இருவரும், உக்கடத்தில் ஒரு லாட்ஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு கேரளா திரும்பியபோது, போலீசாரிடம் சிக்கியுள்ளனர். -இருவரையும் கைது செய்த போலீசார், ஆறு லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதை பொருள், ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.