கோவை மாவட்டத்தில் போத்தனூரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ரயில் நிலையம் இது ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட மிகவும் பழைமையான ரயில் நிலையம் ஆகும்.இந்த ரயில் நிலையத்தை நம்பி ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் பயணம் செய்து வருகிறார்கள்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த ரயில் நிலையத்தில் டிக்கெட் வழங்குவதற்கு ஐந்து கவுண்டர்கள் உள்ளன ஆனால் ஒரு கவுண்டரில் மட்டுமே டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது இதனால் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
மேலும் வெளியூர் செல்ல அவசரமாக வரும் பயணிகள் ரயிலை தவறவிடும் சூழ்நிலையும் உருவாகிறது.
ரயில்வேயை தனியாருக்கு தாரை வார்க்கும் செயலில் காட்டும் வேகத்தை பணியாளர்களை அமர்த்துவதிலும் காட்ட வேண்டும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் வரும் இந்த ரயில்வே துறையில் தேவையான இடங்களில் தேவையான பணியாளரை நியமித்து பயணிகளின் சிரமத்தை குறைக்க வேண்டுமாய் பயணிகளும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-சி.ராஜேந்திரன், கோவை.