ஊர் கூடி மரம் வளர்ப்போம், உலகை பசுமை ஆக்குவோம், என்ற நோக்கில் ஒவ்வொரு வார ஞாயிற்றுக் கிழமையும் ஆனைமலை சுற்றுவட்டாரம் மற்றும் பல்வேறு இடங்களில் ஆலம் விழுது குழுவினர், மரக்கன்றுகளை நடப்பட்டு பராமரிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வகையில் இந்த வார 159-வது களப்பணியாக அக்டோபர் 2ம் தேதி இன்று காந்தி ஜெயந்தியை தினத்தை முன்னிட்டு, கோவை மாவட்டம் ஆனைமலையில் முக்கோணம் அருகே செல்லும் நல்லாற்றில் மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களால் அப்பகுதி மாசடைந்து வருகிறது.
எனவே அந்தப் பகுதியை தூய்மை செய்யும் பணியில் ஆனைமலை ஆலம் விழுது குழுவினர் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த ஆற்றில் உள்ள பிளாஸ்டிக் பொருள்கள் மது பாட்டில்கள் போன்ற பல்வேறு பொருட்களை அப்புறப்படுத்தினர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன், ஆனைமலை.