கோவை மாநகராட்சியில், நீண்ட காலமாக காலியாகவுள்ள 741 துாய்மைப் பணியாளர் பணியிடங்களை நிரப்பாததே, நகரில் குப்பை குவிவதற்கு முக்கியக் காரணமாகத் தெரியவந்துள்ளது. மனித உரிமை ஆணையம் தலையிட்டால்தான், இந்த தற்காலிகப் பணியாளர்கள் குமுறலுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது.
கோவை மாநகராட்சி, 254 சதுர கி.மீ., பரந்து விரிந்துள்ளது. இங்குள்ள 100 வார்டுகளில், தினமும் 1,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக குப்பை சேர்கிறது. நாளுக்கு ஆயிரம் டன் குப்பை சேரும், தமிழகத்தின் இரண்டாவது பெரிய மாநகராட்சியான கோவைக்கு, 3,890 துாய்மைப் பணியாளர் பணியிடங்களை, மட்டுமே தமிழக அரசு அனுமதித்துள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இவர்களில் 3,099 நிரந்தரப் பணியாளர்கள் மட்டுமே, இப்போது பணியில் உள்ளனர். இவர்களைத் தவிர்த்து, 3,260 பேர், தற்காலிகப் பணியாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். கோவை மாநகராட்சிக்கு அனுமதிக்கப்பட்ட, துாய்மைப் பணியாளர்கள் எண்ணிக்கை, ஏற்கனவே மிகவும் குறைவு என்கிற நிலையில், இவற்றில் 700க்கும் அதிகமான பணியிடங்கள், பல ஆண்டுகளாக காலியாக உள்ளன.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சமச்சீர் வளர்ச்சிக்கான கூட்டமைப்பு சார்பில் வாங்கப்பட்டுள்ள தகவல்களில், இந்த உண்மை தெரியவந்துள்ளது. இவ்வமைப்பு வாங்கிய தகவலின் படி, 741 துாய்மைப் பணியாளர் இடங்கள் காலியாகவுள்ளன. மத்திய மண்டலத்தில் 295, கிழக்கில் 178, தெற்கில் 23, மேற்கில் 129, வடக்கில் 116 என்ற எண்ணிக்கையில், துாய்மைப் பணியாளர்கள் இடங்கள் காலியாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
கோவை மாநகராட்சியில் ஒப்பந்தப் பணியாளர்களாகப் பணியாற்றும் பல ஆயிரம் பேர், 10லிருந்து 20 ஆண்டுகள் வரை, தற்காலிகப் பணியாளர்களாகவே பணியாற்றி வருகின்றனர். காலிப் பணியிடங்களை நிரப்பும்போது, இவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென்று, இவர்கள் தரப்பில் கோர்ட்டிலும் உத்தரவுகள் வாங்கப்பட்டுள்ளன. ஆனால் அதை எந்த மாநகராட்சி அதிகாரியும் மதிப்பதேயில்லை.
இவர்களை பணிக்கு வைத்துள்ள ஒப்பந்த நிறுவனங்களும் பொய்க்கணக்குக் காண்பித்து, மிகக்குறைவான ஊதியமே தருகின்றன. கலெக்டர் நிர்ணயித்த ஊதியத்தையும், மாநகராட்சி தர மறுத்ததால்தான், கடந்த வாரத்தில் இவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். இவர்களுக்கு மாநகராட்சி ஊதியம் உயர்த்திக் கொடுத்தாலும், அதை ஒப்பந்த நிறுவனங்கள் முழுதாகத் தருமா என்பதும் கேள்விக்குறியே
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.