கேரளத்தில் இன்னும் மூடநம்பிக்கைகளோடு நரபலி கொடுக்கும் பழக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது இதற்காக பல நர பலிகள் கொலைகளாக மாற்றப்பட்டுள்ளன. 2018 ஆகஸ்ட் 3-ம் தேதி இடுக்கி மாவட்டத்தில் குடும்பம் முழுவதும் கொலை செய்யப்பட்டுள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கணவன் கிருஷ்ணன், மனைவி சுசிலா, மகள் ஆர்ஷா, மகன் அர்ஜுன் அனைவரையும் தலையில் அடித்தும் கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. திருடுவதற்காக இந்த கொலையானது நடந்ததாக முதலில் போலீசார் விசாரணை ஆரம்பித்தனர்.
பின்னர் இது கொலை அல்ல இந்த குடும்பம் முழுவதும் நரபலி கொடுக்கப்பட்டதாக விசாரணையில் காவல்துறையினரால் கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்பொழுது கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
பணத்திற்காக குலமாவை சேர்ந்த வர்கீஸ் என்பவரின் மூன்றாவது மகள் சோபியா என்பவரை இரண்டு நாட்களுக்கு முன்பு சோபியாவின் கணவர் இரவு அனுமன் பூஜை நடத்தி அவருடைய உறவினர்களோடு சேர்ந்து வீட்டின் மையப் பகுதியிலேயே குழி தோண்டி உயிரோடு புதைத்துள்ளனர்.
1987 டிசம்பர் 12ஆம் தேதி முதன்முதலாக நரபலி கொடுக்கப்பட்டதாக கேரளத்தில் சிறு தோனி பிரஸ் கிளப்பில் உள்ள தனபாலன் என்ற செய்தியாளரின் மூலமாக தான் இந்த குற்ற பத்திரிக்கை பதிவானது.
முன்னதாக கூறியது போலவே 2018 ஆம் ஆண்டு நடந்த நரபலி சம்பவம் அதை தொடர்ந்து இன்னும் கேரளாவில் நரபலிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அனைவரும் இதற்கு கடுமையான சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும் இதில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று மக்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலகம் காலங்கள் மாறிய நிலையிலும் இன்னும் மூடநம்பிக்கைகளோடு கூட மனிதர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதற்கு இது மிகப்பெரிய சாட்சி.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.