கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் பகுதியில் சிறுத்தைகளின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அது போன்று நேற்று காலை மூணாறில் நயமக்காடு ஈஸ்ட் டிவிஷனில் சுமார் ஆறு மணி அளவில் நான்கு பசுமாடுகள் ஒரு காளை மாடு சிறுத்தையின் வேட்டைக்கு இறையாக்கப்பட்டு இறந்து கிடந்தது.
கடந்த பல மாதங்களாகவே மூணார் பகுதியை சுற்றி சிறுத்தைகளின் அட்டகாசம் அதிகரித்து வராத மக்கள் புகார் தெரிவித்தும் வனத்துறையினர் சிறுத்தையை வைத்து பிடித்து மக்களுக்கு பாதுகாப்பு அளிப்போம் என்று சொன்ன நிலையிலும் இன்னும் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது இதை வனத்துறையினர் கண்டு கொள்வதில்லை என பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுடைய உயிர்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை என்று மிகவும் அச்சத்தில் உள்ளனர். அது மட்டுமல்லாது இதேபோன்று தொடர்ந்து சம்பவங்கள் நடந்து கொண்டிருப்பதால் இறந்த பசு மாடுகளுக்கு நிவாரண நிதி கொடுக்க வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஜான்சன், மூணார்.