கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த சூரியநெல்லி என்ற சுற்றுலா பகுதியில் சூரியநெல்லி வியாபார சங்கத்தின் சார்பாக வியாபார சங்கத்தினர் இணைந்து சுமார் ஐந்து லட்சம் ரூபாய் செலவு செய்து அந்த டவுன் முழுவதும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதிலிருந்து வைஃபை மூலமாக சாந்தம் பாறை காவல்துறையினருக்கும் மற்றும் வியாபார சங்கத்தினரின் கட்டுப்பாட்டு அறைக்கும் பதிவு செய்யும் வகையில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது.
இதில் தினசரி 100க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இப்பகுதி பாதுகாப்பு வளையமாக மாற்றப்பட்டுள்ளது. இது வியாபாரிகளுக்கு மட்டுமல்லாமல் அங்கே வசிக்கும் மக்களுக்கும் ஒரு பாதுகாப்பாக கருதப்படுகிறது.
கண்காணிப்பு கேமரா வியாபார சங்கத்தின் மூலமாக பொருத்தப்பட்டுள்ளது என்பது பெருமிதம் அளிப்பதாகவும் இதேபோன்று ஒவ்வொரு பகுதிகளிலும் ஆங்காங்கே அங்கே இருக்கும் மக்கள் முயற்சி எடுத்து பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் வியாபாரம் சங்கத்தின் தலைவரான அன்புராஜ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்