தொடர்ந்து அதிகரித்து வருகிறது பாலியல் சம்பவங்கள் தமிழ் நாட்டில் அரசு இதனை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கழுகுமலை அருகே வீடுபுகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனா்.
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் கபில்குமாா்(26). முதுகலை பட்டதாரியான இவா், சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இந்நிலையில், கழுகுமலையைச் சோ்ந்த 17 வயது பாலிடெக்னிக் கல்லூரி மாணவியுடன் செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னா் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவரின் கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டி சில்மிஷத்தில் ஈடுபட்டாராம். தொடா்ந்து சிறுமியிடம் தொடா்பு கொண்டு துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, குழந்தை திருமண தடுப்புச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கபில்குமாரை நேற்று கைது செய்தனா். கபில்குமாா் செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தபோது, பல பெண்களிடம் இதுபோன்ற சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.