பிஹார் மாநிலத்தில் பிர்பய்ன்டி தொகுதியின் எம் எல் ஏ வாக இருப்பவர் லாலன் பாஸ்வான், இவர் ஹிந்து கடவுள்களின் வழிபாடு பற்றி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் கூறுகையில் ஹிந்து கடவுளான லட்சுமியை வழிபடாத முஸ்லிம்களில் பணக்காரர்கள் இல்லையா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
ஹிந்துக் கடவுள் லட்சுமியை வழிபட்டால் தாண் பணம் கொழிக்கும் என்கின்றனர், லட்சுமியை வழிபடாத முஸ்லிம்கள் பணக்காரர்கள் இல்லையா ? சரஸ்வதியை வழிபடாத படித்தவர்கள் அறிவாளிகள் இல்லையா?
ஆத்மா பரமாத்மா என்பதெல்லாம் மக்கள் உருவாக்கிய கொள்கைகள். நீங்கள் நம்பினால், அது கடவுள், இல்லை என்றால் அது வெறும் கல் தான், கடவுள்களை நம்புவதும, வழிபடுவது அவர்வர் விருப்பம்.
இதை நம்புவதற்கு அறிவியல் ஆதாரங்கள் தேவை, கடவுள்களை நம்ப மறுத்தால், உங்களுடைய அறிவு வளரும் என்று லாலன் பாஸ்வான் கூறினார். பாஜகவை சேர்ந்த லாலன் பாஸ்வானின் பேச்சு பாஜக மற்றும் ஹிந்து அமைப்பினர் மத்தியில் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, அவர் கூறிய கருத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
-செய்யத் காதர், குறிச்சி.