கோவை மாவட்டம், அன்னூர் வட்டம் அடுத்துள்ள காட்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட காட்டம்பட்டியில் மேல் குடிநீர் தேக்க தொட்டி 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்த நீர்த்தேக்க தொட்டியானது 30 ஆயிரம் லிட்டர் நீர் கொள்ளளவு உள்ள தண்ணீர் தொட்டி ஆகும். தற்போது 4 தூண்களும் மிகவும் மோசமான நிலையில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விடும் நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அருகில் சென்று தண்ணீர் பிடிக்க அச்சப்படுகின்றனர்.
அண்ணாநகரில் வசிக்கும் சுமார் 250 குடும்பங்களுக்கு இந்த நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தான் 100 இணைப்புகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகின்றது. கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் தேக்க தொட்டி இதே நிலைமையில் இருப்பதினால் ஊர் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கிராமப்புற கட்டிடங்கள் பராமரிப்பு மற்றும் புதுப்பித்தல் திட்டத்தின் மூலமாக 2014 -15 ஆம் ஆண்டு ரூ. 72ஆயிரம் மதிப்பீட்டில் பழுதுபார்க்கப்பட்டது.
பழுது பார்க்கப்பட்டு 7 ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் 4 தூண்களும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. வார்டு உறுப்பினர்கள், கவுன்சிலர், நீர்நிலை அதிகாரிகளிடம் பல முறை கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்ப டவில்லை. மேலும் கடந்த கிராம சபை கூட்டத்தில் இதன் நிலைமையை ஊர் பொதுமக்கள் தெரிவித்தும் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
உடனடியாக சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் இதனை மீண்டும் சீரமைத்து தரும்படி அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.