கோவை மாவட்டம் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழக முழுவதும் சிறப்பாக குழந்தைகளை உற்சாகப்படுத்தும் விதமாக குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம் செட்டிபாளையம் ஊராட்சிப் பள்ளியில் இன்று குழந்தைகள் தின நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கிய சமூக ஆர்வலர் “ஸ்டார் ப்ரோமோட்டர்ஸ்” நிறுவனர் வெங்கடேஷ் அவர்கள் அவர் கூறுகையில், குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்றும், பிற்காலத்தில் பல முக்கிய துறைகளில் பணியாற்ற இருக்கும் இந்த குழந்தைகள் பெற்றோர்கள் நல்ல முறையில் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்றும், அலைபேசிகளை கொடுத்து குழந்தைகளின் படிப்புகளை கெடுக்க வேண்டாம் என்றும், குழந்தைகளை பாதுகாப்புடன் கவனத்துடன் வளர்க்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-தலைமை நிருபர் ஈசா.