கோவை மாவட்டம் பாப்பநாயக்கன் புதூர் பகுதியை சேர்ந்தவர் 30 வயதான சுப்பு ஆனந்த், இவர் ஆர் எஸ் புரம் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. அப்பொழுது இவருக்கு நேர் எதிரே வந்த மாருதி கார் ஒன்று அதிக வேகமாக வந்தது மட்டுமின்றி இவர் மீது பலத்த வேகத்தில் மோதியது, இதில் சுப்புஆனந்த்கிற்க்கு கை கால்களில் பலத்தக்காயம் ஏற்பட்டது, இதனை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இது குறித்து சுப்பு ஆணந்தின் தாய், பாணுமதி ஆர் எஸ் புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அளவுக்கு அதிகமான வேகத்தில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வரதராஜபுரத்தைச் சேர்ந்த 57 வயதான பால்பாண்டி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.