கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த பனிக்கம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த 5 மாத கர்ப்பிணியான இளம் பெண் வனிதாவிற்கு சில தினங்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் கோவை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
காய்ச்சல் ஓரளவு சரியான நிலையில் தீபாவளி பண்டிகைக்காக கோவை அடுத்துள்ள அன்னூர் பகுதிக்கு சென்றுள்ளார். மீண்டும் காய்ச்சல் வரவே கடந்த மாதம் 31ம்தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வனிதாவை பரிசோதித்து பார்த்ததில் ரத்த அழுத்தம் குறைவாக இருந்ததாலும் காய்ச்சலும் குறையாததாலும் மருத்துவர்கள் பல சோதனைகள் செய்ததில் அனைத்தும் பரிசோதனைகளும் நெகட்டிவ் என வந்த காரணத்தால் எலி காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் உடல் மோசமான நிலையை அடைந்து சிகிச்சை பலனின்றி வனிதா மரணமடைந்தார்.
இதனை தொடர்ந்து அரசு மருத்துவ முதல்வர் சுகாதார துறை அதிகாரிகளுக்கு தகவல்தந்துள்ளார். சுகாதாரத்துறை அதிகாரிகள் வனிதாவின் பனிக்கம்பட்டி கிராமம்
அன்னூர் செனற வீடு உடன் இருந்தவர்கள் அவைரையும் பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.
எலி காய்ச்சலால் இளம் வயது கர்ப்பிணி மரமடைந்த தகவலினால்
மக்கள் கவலையில் உள்ளனர்!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.