ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மதுரை வடக்கு மாவட்ட கொட்டாம்பட்டி ஒன்றிய பொதுக்குழுக் கூட்டம் கருங்காலக்குடியில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர், பொறியாளர் பக்ருதீன் அலி அகமத் தலைமையிலும், மாவட்ட பொருளாளர் அயூப்கான் (எ) பாட்டையா முன்னிலையிலும் நடைபெற்ற அந்த பொதுக்குழுக் கூட்டத்தில் ஒன்றியத் தலைவராக சஸர் அலி, செயலாளராக சிராஜுதீன், பொருளாளராக சையது இஸ்மாயில் ஆகியோரும் துணைத் தலைவராக ரபீக் ராஜா, துணைச் செயலாளர்களாக பாவா பகுர்தீன் மற்றும் ரபீக் ராஜா ஆகியோரும் ஒன்றிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பணி சிறக்க, கலந்து கொண்ட அனைவரும் வாழ்த்தினர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
– மதுரை வெண்புலி.